Jul 27, 2026
Thisaigal NewsYouTube
தந்தையின் சித்ரவதைக்கு ஆளான ஆறு மாதக் குழந்தை உயிரிழந்தது
தற்போதைய செய்திகள்

தந்தையின் சித்ரவதைக்கு ஆளான ஆறு மாதக் குழந்தை உயிரிழந்தது

Share:

காஜாங், ஏப்ரல் 17-

சிலாங்கூர், பண்டார் தாஸிக் கேசுமா-வில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் ஆறு மாத ஆண் குழந்தை ஒன்று தனது தந்தையால் சித்ரவதை செய்யப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட அக்குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பது சவப் பரிசோதனையின் மூலம் தெரியவந்ததாகவும் அக்குழந்தை வன்மையாக சித்ரவதை செய்யப்பட்டு உயிரிழந்திருப்பதாகவும் நம்பப்படுகின்றது.

நேற்று காலை 8.52 மணியளவில் 25 வயதுடைய அக்குழந்தையின் தந்தையிடமிருந்து இதுக்குறித்து முதலில் புகார் பெறப்பட்டதாக காஜாங் மாவட்ட காவல்துறையின் துணைத்தலைவர் கண்காணிப்பாளர் முகமட் நசீர் த்ரஹ்மான் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக அக்குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டதுடன் அவர் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது சோதனையில் கண்டறியப்பட்டதாக முகமட் நசீர் தகவலிட்டார்.

கைது செய்யப்பட்ட அவ்வாடவர் ஏப்ரல் 22 ஆம் தேதி வரையில் 7 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதுடன் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முகமட் நசீர் அறிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்