Jul 15, 2026
Thisaigal NewsYouTube
முதலீட்டு மோசடி: RM28 மில்லியன் தீர்ப்பை உறுதி செய்த நீதிமன்றம்
தற்போதைய செய்திகள்

முதலீட்டு மோசடி: RM28 மில்லியன் தீர்ப்பை உறுதி செய்த நீதிமன்றம்

Share:

அனுமதி பெறாத முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யுமாறு முறைகேடாக வழிநடத்திய குற்றத்திற்காக, 122 மலேசிய முதலீட்டாளர்களுக்குச் சுமார் RM28 மில்லியனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் விதித்த தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த உத்தரவு சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் சான் சே ஷின்க்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்தரங்குகள் மற்றும் விளக்கக் கூட்டங்கள் மூலம் அனுமதி பெறாத முதலீட்டுத் திட்டங்களைத் தீவிரமாக விளம்பரப்படுத்திய நடவடிக்கைகள், மூலதனச் சந்தைகள் மற்றும் சேவைகள் சட்டம் 2007 இன் கீழ் ஒழுங்குபடுத்தப்படும் முதலீட்டு நடவடிக்கைகளாகும் என்று தீர்ப்பளித்த நீதிபதிகள் சைனி மஸ்லான், லியோனார்ட் டேவிட் ஷிம் மற்றும் அலிசா சுலைமான் ஆகியோர் அடங்கிய மூவர் அமர்வு, சான் சே ஷின் தாக்கல் செய்த மேல்முறையீட்டையும் முதலீட்டாளர்களின் எதிர் மேல்முறையீட்டையும் ஒருமனதாகத் தள்ளுபடி செய்தது.

ஃபுல்டா மலேசியா பிஹெச்டி மற்றும் பலாவ் கேபிட்டல் லிமிடெட் எனப்படும் இரு நிறுவனங்கள் வழியாக, 2016ஆம் ஆண்டு முதல் பல முதலீட்டுத் திட்டங்களை சான் சே ஷின் அறிமுகப்படுத்தியதாகவும், அனுமதியின்றி முதலீட்டு நிதியை திரட்டியதாக உயர்நீதிமன்றம் முன்னதாக தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News