Jul 15, 2026
Thisaigal NewsYouTube
ஃபாரஸ்ட் சிட்டி விவகாரம்: 266 வெளிநாட்டினரிடம் சோதனை
தற்போதைய செய்திகள்

ஃபாரஸ்ட் சிட்டி விவகாரம்: 266 வெளிநாட்டினரிடம் சோதனை

Share:

அனைத்துலக குடிநுழைவு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 266 வெளிநாட்டினரும் முறையான குடியேற்ற ஆவணங்களை வைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. இந்தச் சோதனை, இஸ்கந்தர் புத்திரி மாநகர சபை, மலேசியா பல்லூடகம் மற்றும் தொடர்புத் துறை ஆணையம், ஜொகூர் மாநில அரசு மற்றும் போலீஸ் ஆகியோருடன் இணைந்து நேற்று ஜொகூர் - ஃபாரஸ்ட் சிட்டி-இல் நடத்தப்பட்டதாக குடிநுழைவுத் துறை தலைமை இயக்குனர் ஜகாரியா ஷாபான் தெரிவித்தார்.

ஜொகூர் -ஃபாரஸ்ட் சிட்டி-இல் உள்ள நெட்வொர்க் பள்ளி என்ற தனியார் குடியிருப்புப் பகுதியில் இஸ்ரேல் குடிமக்கள் மாற்று நாட்டு கடபிதல்களைப் பயன்படுத்தி தங்கியிருப்பதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும், தற்போதைய பதிவுகளின்படி சோதனை செய்யப்பட்ட அனைவரும் முறையான ஆவணங்களை வைத்துள்ளனர் என்றும், குடிநுழைவு விதிமுறைகள் மற்றும் குடிநுழைவு சட்டம் 1959/63 ஆகியவற்றின் முழுமையான இணக்கத்தை உறுதிப்படுத்த மேல்விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

அடையாளங்கள் மற்றும் பயண ஆவணங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதா அல்லது வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்ட விசாக்களின் நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரிக்கப்படும் என்றும், நாட்டின் பாதுகாப்பைப் பேண குடிநுழைவு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜகாரியா ஷாபான் எச்சரித்துள்ளார்.

Related News