Jul 27, 2026
Thisaigal NewsYouTube
தென் தாய்லாந்து பாதுகாப்பாக உள்ளது
தற்போதைய செய்திகள்

தென் தாய்லாந்து பாதுகாப்பாக உள்ளது

Share:

தாய்லாந்து, ஏப்ரல் 29-

தென் தாய்லாந்திலுள்ள சில பகுதிகளில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருந்தாலும், அப்பகுதி பாதுகாப்பாக இருப்பதால் மலேசியர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வருகைப் புரியலாம் என சொங்க்லா-விலுள்ள மலேசிய தூதரர் அஹ்மத் ஃபஹ்மி அஹ்மத் சர்காவி தெரிவித்தார்.

பெரும்பாலான குண்டு வெடிப்புகள் புறநகர் பகுதிகளில் மட்டுமே நிகழ்ந்துள்ளன. மாறாக, மக்கள் அதிகமாக திரளுகின்ற இடங்கள் அல்ல என அவர் தெளிவுபடுத்தினார்.

பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில், அந்த தாக்குதல் நடத்தப்படவில்லை. போலீஸ் உள்ளிட்ட அந்நாட்டு அமலாக்க தரப்புகளுக்கும் கலகக்காரர்களுக்கும் இடையில் அந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

ஆகையால், தாய்லாந்திற்கு வருவதற்கு அஞ்சவேண்டியதில்லை என்றாலும், எதிர்பாராத சம்பவங்களைத் தவிர்க்க, மலேசியர்கள் அவ்வப்போது கவனமாக இருக்க வேண்டுமென அஹ்மத் ஃபஹ்மி கேட்டுக்கொண்டார்.

அண்மையில் வெளியிடப்பட்ட தரவின்படி, கடந்தாண்டு சுமார் 4.56 மில்லியன் மலேசியர்கள் தாய்லாந்திற்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்