முவார்,பிப்.2
மூவாரில் முன்னாள் காதலியின் சகோதரியை 8 வாரக் கர்ப்பமாகும் வரையில் பாலியல் பலாத்காரம் புரிந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் அளித்த புகாரை தொடர்ந்து 23 வயதுடைய சந்தேகிக்கும் ஆடவர் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் மூவாரில் உள்ள ஒரு வீட்டில் இச்சம்பவம் நடந்திருப்பதாகவும் இதன் விளைவாக அப்பெண் கருவுற்றிப்பதாகவும் மூவார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ராயிஸ் முக்லிஸ் அஸ்மான் அசிஸ் தெரிவித்தார்.
காய்ச்சல் மற்றும் வாந்தியின் காரணமாக 13 வயதுடைய அப்பெண் கடந்த புதன்கிழமை இரவு 9 மணியளவில் மஹாரானி சிகிச்சையகத்திற்கு சென்றிருந்தபோது இந்த உண்மை வெளிவந்ததாக கூறினார்.
குற்றவியல் சட்டம் 376 பிரிவின் கீழ் சந்தேகிக்கும் நபர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ராயிஸ் முக்லிஸ் விவரித்தார்.








