May 22, 2026
Thisaigal NewsYouTube
மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருட்களை குறித்து ந‌ல்லதொரு செய்தியை பிரதமர் நாளை அறிவிப்பார்
தற்போதைய செய்திகள்

மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருட்களை குறித்து ந‌ல்லதொரு செய்தியை பிரதமர் நாளை அறிவிப்பார்

Share:

நாட்டில் மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருட்களை குறித்து ந‌ல்லதொரு செய்தியை நாளை பிரதமர் Dato Sri Anwar Ibrahim அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக தொடர்பு அமைச்சர் Fahmi Fadzil தெரிவித்தார்.

மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பயன்படும் அத்தியாவசிய பொருட்களை குறித்த நல்ல ஒரு தகவலை தாம் வெளியீடு செய்வதை விட நாளை பிரதமரே கூறுவார் என்று Kuala Lumpur, Pantai Dalam - மில் உள்ள ஒரு Mydin Mart பல்பொருள் பேரங்காடியை இன்று தொடக்கி வைத்து பேசுகையில் Fahmi Fadzil கூறினார்.

இது, மத்திய அரசாங்கத்திற்கும் தொழில் துறைக்கும் இடையிலுள்ள நல்ல ஓர் ஒத்துழைப்பை காட்டுவதாக அவர் மேலும் விவரித்தார்.

பச்ச அரிசிக்கான விலையை குறித்து அரசாங்கம் இவ்வாண்டு October மாதத்திற்குள் பரிசீலிக்கும் என்று விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் Mohamad Sabu கடந்த திங்கட்கிழமை கூறியிருந்தார்.

இந்த பச்ச அரிசி விலை குறித்து அரசாங்கம் இன்னும் பரிசீலித்து வருவதாகவும் விரைவில் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி காணப்படும் என்றும் அவர் தகவல் வெளியிட்டிருந்தார்.

Related News