குவா மூசாங், ஆகஸ்ட்.02-
கிளந்தான் மாநிலம், Kampung Pulau Setelu பகுதியில் தோட்டப்புறம் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து நாசம் செய்து வந்த ஆண் காட்டு யானையை, Perhilitan எனப்படும் வனவிலங்குகள் மற்றும் தேசிய பூங்காக்கள் துறை அதிகாரிகள் வெற்றிகரமாகப் பிடித்து, அதன் இயற்கை வாழ்விடத்திற்கு மாற்றியுள்ளனர்.
இது குறித்து கிளந்தான் மாநில Perhilitan இயக்குநர் Wan Mohd Adib Wan Yusoh கூறுகையில், 15 முதல் 18 வயதுக்குட்பட்ட "Awang Tar Setelu" என்ற அந்த யானை, Suria மற்றும் Indah என்ற இரண்டு பெண் யானைகளின் உதவியுடன் பிடிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக இந்த யானையால் பனை எண்ணெய், வாழை மற்றும் Musang King டுரியான் தோட்டங்கள் சேதமடைந்ததுடன், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், யானை வெற்றிகரமாக இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.








