கடந்த 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பிகேஆர் சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிட்டு, வெற்றிப் பெற்றப்பின்னர் கட்சிவிட்டு கட்சித் தாவிய சில துரோகிகளுக்கு எதிராக தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக அக்கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர ஃபாமி ஃபட்ஸில் தெரிவித்தார்.
14 ஆவது பொதுத் தேர்தலில் மக்கள் தந்த அபரிமித ஆதரவினால் 60 ஆண்டு கால பாரிசான் நேஷனல் ஆட்சிக்கு பக்காத்தான் ஹராப்பான் முற்றுப்புள்ளி வைத்து, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.
ஆனால், துரோகிகளின் நயவஞ்சகத்தினால் எம்.பி.க்கள் பலர் கட்சிவிட்டு கட்சி மாறியதால் இரண்டு ஆண்டுகளிலேயே பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் கவிழ்ந்தாக ஃபாமி ஃபட்ஸில் சுட்டிக்காட்டினார்.
துரோகம் செய்த பிகேஆர் முன்னாள் எம்.பி.க்களுக்கு எதிராக கட்சித் தலைமையகம் தொடுத்து வரும் இழப்பீடு கோரும் வழக்கில் இன்று முதல் வெற்றி கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
PKR கட்சியின் முன்னாள் உதவித் தலைரும், அம்பாங் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜுரைடா கமருடீன் கட்சி விட்டு கட்சித் தாவியதற்காக இழப்பீட்டுத் தொகையாக ஒரு கோடி வெள்ளியை பிகேஆர் கட்சிக்கு வழங்க வேண்டும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது தொடர்பில் ஃபாமி ஃபட்ஸில் எதிர்வினையாற்றினார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


