Mar 17, 2026
Thisaigal NewsYouTube
ஜேபிஜே உத்தரவை மீறி வாகனங்களை மோதிய நபர்
தற்போதைய செய்திகள்

ஜேபிஜே உத்தரவை மீறி வாகனங்களை மோதிய நபர்

Share:

குவாலா லாங்ஙாட் - டில் சாலைப் போக்குவரத்து துறை மற்றும் பொதுமக்களின் வாகனங்களை தாக்கியதுடன் காரை நிறுத்தும்படி உத்தரவிட்ட ஜேபிஜே - வை மீறி தப்பிச் சென்ற சந்தேகிக்கும் நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து கடந்த திங்கட்கிழமை மதியம் 2.45 மணியளவில் ஜேபிஜே அமலாக்கத்திடமிருந்து புகார் பெற்றதாக குவால லாங்ஙாட் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் ரிட்வான் முஹமாட் நோர் சாலெ தெரிவித்தார்.

தெலோக் பங்லிமா காராங்கில் ஜேபிஜே உறுப்பினர்கள் பணியில் ஈடுப்பட்டிருந்த வேளையில் இச்சம்பவம் நடந்திருப்பதாக ஜேபிஜே பணியாளர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளதாக அஹ்மாட் ரிட்வான்கூறினார்.

ப்ரோத்தோன் வீரா ரக வாகனத்தை ஓட்டி வந்த நபரை ஜேபிஜே பணியாளர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் காரை நிறுத்த உத்தரவிட்ட வேளையில் அந்நபர் அத்துமீறி சென்றதாகவும் பின் தெலோக் பங்லிமா காராங்கில் பள்ளியின் முன் அவரின் கார் சேதமடைந்து நிறுத்தப்பட்டு தப்பிச் சென்றது தெரியவந்ததாக அஹ்மாட் ரிட்வான் அறிவித்தார்.

குற்றவியல் சட்டம் 188 பிரிவின் கீழ் இவ்விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அஹ்மாட் ரிட்வான் குறிப்பிட்டார்.

Related News

ஜேபிஜே உத்தரவை மீறி வாகனங்களை மோதிய நபர் | Thisaigal News