Mar 17, 2026
Thisaigal NewsYouTube
மருத்துவமனை பணியாளர் உட்பட மூவர் கைது
தற்போதைய செய்திகள்

மருத்துவமனை பணியாளர் உட்பட மூவர் கைது

Share:

மருத்துவமனைக்கு மருந்துப் பொருட்களை விநியோகித்தது போன்று போலியான கணக்கு அறிக்கையை தயாரித்து, 75 ஆயிரம் வெள்ளி கோரியது தொடர்பில் மருத்துவமனை பணியாளர்கள் இருவரையும், மருந்துப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனம் ஒன்றின் அதிகாரியையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளது.

36,39 வயதுடைய அந்த இரண்டு மருத்துவமனைப் பணியாளர்களும், 55 வயதுடைய மருந்துப்பொருட்கள் விநியோகிப்பாளரும் கைது செய்யப்பட்டு, இன்று காலை 10 மணியளவில் ஈப்போ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

ஈப்போ மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளதாக கூறப்படும் இந்த ஊழல் தொடர்பில் அந்த மூன்று பேரையும் விசாரணைக்கு உதவும் பொருட்டு அடுத்த வாரம் திங்கட்கிழமை வரை தடுப்புக்காவலில் வைப்பதற்கு SPRM- மிற்கு மாஜிஸ்திரேட் S. புனிதா அனுமதி அளித்தார்.

Related News