Mar 22, 2026
Thisaigal NewsYouTube
கிள்ளான் பள்ளத்தாக்கில் நாளை தொடங்குகிறது, நீர் விநியோக இடையூறு
தற்போதைய செய்திகள்

கிள்ளான் பள்ளத்தாக்கில் நாளை தொடங்குகிறது, நீர் விநியோக இடையூறு

Share:

சிலாங்கூர், ஜூன் 04-

கிள்ளான் பள்ளத்தாக்கில் நாளை ஜுன் 5 ஆம் தேதி புதன்கிழமை தொடங்கி 7 ஆம் தேதி வரை மூன்று தினங்களுக்கு குடிநீர் விநியோகச் சேவையில் இடையூறு ஏற்படும் என்று சிலாங்கூர் மாநிலத்தின் பிரதான நீர் விநியோகிப்பு நிறுவனமான Air Selangor அறிவித்துள்ளது.

நாளை காலை முதல் நீர் சேவையில் பாதிப்பு ஏற்படும் என்பதால் மக்கள் இன்றிரவுக்குள் போதுமான நீரை சேமித்து வைத்துக்கொள்ளுபடி அந்த நிறுவனம் ஆலோசனை கூறியுள்ளது.

நீர் விநியோகிப்பில் இந்த மூன்று நாள் கட்டம் கட்டாக பாதிக்கப்படும் பகுதிகளுக்கு போதுமான நீரை விநியோகிப்பதற்கு 182 டெங்கர்கள் தயார்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெட்டாலிங் பகுதியிலும் 20 டெங்கர்களும், கிள்ளான் பகுதியில் 19 டெங்கர்களும், கோம்பாக் பகுதியில் 18 டெங்கர்களும், கோலாலம்பூரில் 16 டெங்கர்களும், உலு சிலாங்கூர் மற்றும் ஷா ஆலமில் தலா மூன்று டெங்கர்களும், கோலசிலாங்கூருக்கு எட்டு டெங்கர்களும் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்படும் பகுதிகளில் நீர் விநியோகம் வரும் ஜுன் 7 ஆம் தேதி நள்ளிரவுக்குள் வழக்க நிலைக்கு திரும்பும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி