புத்ராஜெயா, நவம்பர்.20-
போதைப்பொருள் வழக்கில் தனது அண்ணனை விடுவிப்பதற்காக ஆடவர் ஒருவரிடம் மூவாயிரம் ரிங்கிட் லஞ்சம் கேட்டு, பெற்றதாக புலன் விசாரணை அதிகாரி ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணைமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.
40 வயது மதிக்கத்தக்க அந்த புலன் விசாரணை அதிகாரி, இன்று ஷா ஆலாம், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, மூன்று நாட்கள் தடுப்பு காவலில் வைப்பதற்கு நீதிமன்ற ஆணையை எஸ்பிஆர்எம் பெற்றுள்ளது.
அந்த புலன் விசாரணை அதிகாரி நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் ஷா ஆலாமில் உள்ள அவரின் பணியிடத்தில் கைது செய்யப்பட்டதாக எஸ்பிஆர்எம் தகவல்கள் கூறுகின்றன.








