May 21, 2026
Thisaigal NewsYouTube
ஐந்து போலீஸ்காரர்கள் நாளை குற்றஞ்சாட்டப்படுவர்
தற்போதைய செய்திகள்

ஐந்து போலீஸ்காரர்கள் நாளை குற்றஞ்சாட்டப்படுவர்

Share:

தொழிற்சாலை ஊழியர் ஒருவரை மடக்கி, அவரின் வாகனத்தில் போதைப்பொருள் இருப்பதாக மிரட்டி, வங்கி ATM இயந்திரத்தில் 4,500 வெள்ளிப் பணத்தை மீட்கச்செல்லி, அப்பணத்தை பறித்து சென்றதாக கூறப்படும் MPV ரோந்து கார் பிரிவைச் சேர்ந்த ஐந்து போலீஸ்காரர்கள் நாளை புக்கிட் மெர்தாஜம் போலீஸ் நிலையத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கின்றனர்.

Sarjan அந்தஸ்தில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரி உட்பட ஐந்து போலீஸ்காரர்களையும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுமாறு மாநில துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்திலிருந்து உத்தரவு கிடைத்து விட்டதாக பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ காவ் கொக் சின் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் போலீஸ் படையைச் சேர்ந்த தங்கள் சொந்த உறுப்பினர்களே சம்பந்தப்பட்டு இருந்தாலும் போலீஸ் துறை யாரையும் தற்காக்காது என்று டத்தோ காவ் உறுதி அளித்தார்.

Related News