கோலாலம்பூர், நவ.14-
பள்ளிப்படிப்பை முடித்து, கல்வியில் தொடர்ந்து நாட்டம் இல்லாத 18 வயது இளையோர்கள், திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி, தொழில் ஈடுபாடு மற்றும் சுயமேம்பாட்டை உருவாக்கி, உள்ளூர் மற்றும் சர்வதேச தொழில் சந்தைக்கு ஏற்ப திறன் பெற்ற ஆள்பலத்தை உருவாக்குதில் பெர்ஜெயா டிவெட் கல்லூரி மலேசியாவின் முன்னணி கல்லூரியாக விளங்கிறது.
இளையோர்களை செழிப்பான வாழ்க்கையை நோக்கி அழைத்துச் செல்வதற்கும், அவர்களின் எதிர்காலத்திற்கான வெற்றிக்களத்தை அமைத்துக்கொடுப்பதற்கு தொடர்ந்து ஆக்கப்பூர்வமான வழிகாட்டலை வழங்கி வரும் பெர்ஜெயா டிவெட் கல்லூரி, சமையல்கலை மற்றும் ஹோட்டல் தொழில் துறையில் மூன்று வகையான பயிற்சிகளை வழங்குகிறது.

SKM எனப்படும் மலேசிய திறன்பயிற்சி சான்றிதழுடன் United Kingdom-மின் Diploma-விற்கான City & Guilds இரட்டைச் சான்றிதழையும் வழங்கி, மாணவர்களை உலக சந்தைக்கு தயார்படுத்தும் வகையில் இந்த மூன்று தொழில் திறன் பயிற்சிகளின் வாயிலாக அனைத்துலக அங்கீகாரத்தை பெர்ஜெயா டிவெட் கல்லூரி வழங்குகிறது.
Food Preparation & Culinary Arts / Food & Beverage மற்றும் Reception Services ஆகியவையே பெர்ஜெயா டிவெட் கல்லூரி சமையல் கலை மற்றும் ஹோட்டல் துறை சார்ந்த மூன்று தொழில் திறன் பயிற்சிகளாகும்.
Food Preparation & Culinary Arts குறித்து ஏற்கனவே விளக்கம் அளித்த நிலையில், இரண்டாவது தொழில் பயிற்சியான Food & Beverage திட்டமானது, மாறுப்பட்ட சூழல்களில் பணி செய்யும் முறை, வெவ்வேறு பண்பாட்டுச்சூழலில் இயங்கும் மனிதர்களோடு தொடர்புக்குரிய ஒரு முக்கிய துறையாகும் என்கிறார் பெர்ஜெயா டிவெட் கல்லூரி தலைவரான டாக்டர் R. சிவபிரகாஷ்.

நாட்டின் முன்னணி வர்த்தக குழுமமான பெர்ஜெயா வினால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த டிவெட் பயிற்சித்திட்டங்களில் இளையோர்கள் அதிகளவில் பங்கு கொண்டு, தொழில் திறன்களை வளர்த்துக்கொண்டு, உலக சந்தைக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
தங்களுக்கு கிடைக்கக்கூடிய அனுபவம் மற்றும் ஆற்றலுடன், தங்களின் அனைத்துலக சான்றிதழ் அங்கீகாரத்தை முன்னிறுத்தி, உள்ளூர் மட்டுமின்றி உலகளாவிய நிலையில் கொட்டிக்கிடக்கும் தொழில் திறன் வேலை வாய்ப்புகளை பற்றிக்கொண்டு முன்னேற வேண்டும் என்று பெர்ஜெயா டிவெட் கல்லூரி வழங்கும் தொழில் திறன் பயிற்சிகளில் பங்கேற்க இளையோர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் டாக்டர் சிவபிரகாஷ்.








