Sep 22, 2026
Thisaigal NewsYouTube
RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது
தற்போதைய செய்திகள்

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

Share:

கோலா திரங்கானு, ஆகஸ்ட்.02-

திரெங்கானு மாநிலம் Gong Badak பகுதியில் நடைபெறும் RXZ மோட்டார் சைக்கிள் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்ததாக நம்பப்படும் மூன்று பேர், Paka ஓய்வு மையத்தில் Ketum நீர் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து திரங்கானு மாநில போலீஸ் தலைவர் கைரி கைருடின் கூறுகையில், 16 முதல் 32 வயதுக்குட்பட்ட மூவரும் பயணித்த வேனை சோதனையிட்ட போது, சுமார் 600 மில்லி அளவிலான Ketum இலைகள் காய்ச்சி தயாரிக்கப்பட்டதாக நம்பப்படும் திரவம் அடங்கிய இரண்டு பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட மூவரும் திரங்கானு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும், RXZ நிகழ்ச்சிக்காக வந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, வழக்குடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஏழு வீடுகள் மற்றும் தங்கும் விடுதி ஒன்றில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

Related News