16 வயது பள்ளி மாணவியை இரண்டு வெவ்வேறு இடங்களில் பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு, போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட போலீஸ் சார்ஜண்ட் அதிகாரி ஒருவர், மற்றொரு பாலியல் பலாத்காரம் சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக புகார் ளிக்கப்பட்டது தொடர்பில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலையில் பேரா, பத்து காஜா மாஜிஸ்திரேட் நீதிமன்றதில் நிறுத்தப்பட்ட 42 வயது அந்த போலீஸ் சார்ஜண்ட், மற்றொரு பாலியல் பலாத்காரம் சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு ஏதுவாக தடுத்து வைக்கப்படுவதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றனர்.
முதல் சம்பவத்தில் கடந்த ஆண்டில் நான்காம் படிவ மாணவியை , அந்த போலீஸ் அதிகாரி, போலீஸ் நிலையத்திற்கு முன்புறம் தனது காரிலும், பின்னர் பேரங்காடி மையம் ஒன்றின் கார் நிறுத்தும் இடத்திலும் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக புகார் செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான புலன் விசாரணை முடிவடைந்து, விசாரணை அதிகாரி, துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்திற்கு அனுப்பட்ட வேளையில் அந்த போலீஸ் அதிகாரி மற்றொரு பாலியல் பலாத்கார சம்பவத்தில் சம்பந்தப்பட்டு இருப்பது அம்பலமாகியுள்ளது. .








