Aug 16, 2026
Thisaigal NewsYouTube
வெளிநாட்டினர் தொடர்புடைய மோசடி கும்பல்; 1.1 மில்லியன் ரிங்கிட் வங்கிக் கணக்குகளை முடக்கியது எஸ்பிஆர்எம்
தற்போதைய செய்திகள்

வெளிநாட்டினர் தொடர்புடைய மோசடி கும்பல்; 1.1 மில்லியன் ரிங்கிட் வங்கிக் கணக்குகளை முடக்கியது எஸ்பிஆர்எம்

Share:

குடிநுழைவுத் சட்டத்தை மீறி, முறையான ஆவணங்களின்றி வெளிநாட்டினரை நாட்டில் தங்க வைத்தது மற்றும் சமூகப் பயண விசாவைத் தவறாகப் பயன்படுத்திய வழக்கில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன் கீழ், 5 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்குச் சொந்தமான 14 வங்கிக் கணக்குகளிலிருந்த சுமார் 1.1 மில்லியன் ரிங்கிட் பணத்தை ஆணையம் முடக்கியுள்ளது.

கடந்த புதன்கிழமை புத்ராஜெயா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா ஆகிய நான்கு மாநிலங்களில் நடத்தப்பட்ட கூட்டுச் சோதனையில், அமலாக்க அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் உட்பட 38 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், 3.9 லட்சம் ரிங்கிட் ரொக்கம், 10 ஆடம்பரக் கார்கள், தங்கக் கட்டிகள் மற்றும் நகைகள் உட்பட சுமார் 2.5 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவத்தை எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அப்துல் ஹலிம் அமான் உறுதிப்படுத்தியுள்ளார்.

Related News