Sep 24, 2026
Thisaigal NewsYouTube
மாணவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற 15 வயது சிறுமி மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது
தற்போதைய செய்திகள்

மாணவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற 15 வயது சிறுமி மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது

Share:

சக பள்ளி மாணவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயற்சி செய்ததாக, இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் கோலா லங்காட் தெலுக் டத்தோ மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

மஜிஸ்திரேட் மஸ்லிந்தா செலாமட் முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த இளம் பெண்ணின் மனநலம் தொடர்புடைய மதிப்பீட்டு அறிக்கை கிடைக்கும் வரையில் அவரிடம் எந்தவொரு வாக்குமூலப் பதிவும் செய்யப்படவில்லை.

அதே வேளையில், அந்தப் பெண்ணின் மனநிலை தொடர்பாக மருத்துவப் பரிசோதனை செய்ய அவரைப் பேராக், உலு கிந்தா பஹாகியா மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று புரோசிகியூஷன் தரப்பு செய்துகொண்ட விண்ணப்பத்திற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

கடந்த ஜூலை 6-ஆம் திகதி காலை 9.50 மணியளவில் பந்திங்கில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளி சிற்றுண்டியில் அந்தப் பெண் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News