Jul 10, 2026
Thisaigal NewsYouTube
பொழுதுபோக்கு மையங்களுக்கு போதைப்பொருள் விநியோகித்த கும்பல் சிக்கியது
தற்போதைய செய்திகள்

பொழுதுபோக்கு மையங்களுக்கு போதைப்பொருள் விநியோகித்த கும்பல் சிக்கியது

Share:

கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் குவாந்தான் ஆகிய பகுதிகளில் உள்ள பொழுதுபோக்கு மையங்களுக்கு செயற்கை போதைப்பொருட்களை விநியோகம் செய்து வந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல், போலீஸ் நடத்திய 'ஓப் முஸ்கா' அதிரடி சோதனையில் முறியடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோலாலம்பூர் மற்றும் பகாங் ஆகிய பகுதிகளில் போலீஸ் நடத்திய ஐந்து தனித்தனி சோதனைகளில், 25 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆறு உள்ளூர் ஆண்களும் ஒரு வெளிநாட்டுப் பெண்ணும் கைது செய்யப்பட்டனர். இந்தச் சோதனைகளின் போது, RM13.2 மில்லியன் மதிப்புள்ள 84.3 கிலோகிராம் எம்.டி.எம்.ஏ போதைப்பொருள் தூள், 4.4 கிலோகிராம் எக்ஸ்டசி மாத்திரைகள், 2.4 கிலோகிராம் கெட்டமின் மற்றும் 730 கிராம் எரமின் 5 மாத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்களை போலீஸ் பறிமுதல் செய்தனர்.

போதைப்பொருட்களுடன் சேர்த்து, இக்கும்பலுக்குச் சொந்தமான 10 வாகனங்கள் உட்பட RM1.28 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்களையும் போலீஸ் பறிமுதல் செய்துள்ளனர்.

Related News

மூன்று ஆண்டுகள் ஓய்வுக்குப் பின் மீண்டும் வழக்கறிஞராக சட்டப் பணியில் இணைந்தார் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.குணாளன்

மூன்று ஆண்டுகள் ஓய்வுக்குப் பின் மீண்டும் வழக்கறிஞராக சட்டப் பணியில் இணைந்தார் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.குணாளன்

மாணவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற 15 வயது சிறுமி மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது

மாணவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற 15 வயது சிறுமி மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது

பெர்கேசோவின் 24 மணி நேர விபத்துக் காப்பீட்டுத் திட்டம் இனி கட்டாயமில்லை; விருப்பத்தின் பேரில் மட்டுமே அமல்

பெர்கேசோவின் 24 மணி நேர விபத்துக் காப்பீட்டுத் திட்டம் இனி கட்டாயமில்லை; விருப்பத்தின் பேரில் மட்டுமே அமல்

ஜோகூர் மாநில பாதுகாப்பு உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த உள்துறை அமைச்சு பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துகிறது!

ஜோகூர் மாநில பாதுகாப்பு உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த உள்துறை அமைச்சு பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துகிறது!

கொலைகுற்றச்சாட்டு: மூவரை எதிர்வாதம் புரிய உயர் நீதிமன்றம் உத்தரவு

கொலைகுற்றச்சாட்டு: மூவரை எதிர்வாதம் புரிய உயர் நீதிமன்றம் உத்தரவு

அனைத்து மாநிலங்களிலும் ட்ரோன் பிரிவுகள்: குடிநுழைவுத் துறை அதிரடி திட்டம்!

அனைத்து மாநிலங்களிலும் ட்ரோன் பிரிவுகள்: குடிநுழைவுத் துறை அதிரடி திட்டம்!