ஜோகூர் மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் பொதுச் சேவை கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், உள்துறை அமைச்சு பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

இதன் கீழ், செகாமட் மாவட்டக் போலீஸ் தலைமையகம் கட்டுதல், பெங்கெராங் மாவட்டக் போலீஸ் தலைமையகத்திற்கான நிலத்தைக் கையகப்படுத்துதல், போலீஸ் குடியிருப்பு மற்றும் மின்தூக்கிகளைப் பழுதுபார்த்தல் போன்ற திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதே வேளையில், சுல்தான் இஸ்கந்தர் கட்டிடம் மற்றும் சுல்தான் அபு பக்கர் வளாகத்தில் உள்ள குடிநுழைவுத் துறை வசதிகளும் மேம்படுத்தப்படவுள்ளன.

மேலும், பத்து பகாட் மாவட்ட தேசியப் பதிவுத் துறை அலுவலகம் கட்டுதல், குளுவாங் மற்றும் சிம்பாங் ரெங்கம் சிறைச்சாலைகளின் அடிப்படை அமைப்புகளைத் தரம் உயர்த்துதல், தேசிய போதைப்பொருள் ஒழிப்பு முகமையின் அலுவலகம் மற்றும் சமூக சிகிச்சை-புனர்வாழ்வு மையங்களை மறுசீரமைத்தல், அபு பக்கர் கடல்சார் தளத்தின் ஜெட்டி மற்றும் கட்டிடங்களைத் தரம் உயர்த்துவது போன்ற திட்டங்களும் இதில் அடங்கும். இந்த ஒதுக்கீடுகள் அனைத்தும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, பாதுகாப்புப் படை அதிகாரிகளின் நலன்களையும் மேம்படுத்தும் என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.








