Sep 24, 2026
Thisaigal NewsYouTube
கொலைகுற்றச்சாட்டு: மூவரை எதிர்வாதம் புரிய உயர் நீதிமன்றம் உத்தரவு
தற்போதைய செய்திகள்

கொலைகுற்றச்சாட்டு: மூவரை எதிர்வாதம் புரிய உயர் நீதிமன்றம் உத்தரவு

Share:

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, சிலாங்கூர், ஸ்ரீ கெம்பாங்கான், புக்கிட் செர்டாங், தாமான் பெரிண்டஸ்ட்ரியன் தொழில் பேட்டைப்பகுதியில் ஓர்ஆடம்பர அடுக்கு மாடி வீட்டில் ஆடவர் ஒருவரை அடித்து கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று இந்திய ஆடவர்கள், எதிர்வாதம் புரியும்படி ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இக்கொலை வழக்கில் மூவரும் இக்கொலையை செய்தற்கான அடிப்படை முகாந்திரங்களை பிராசிகியூஷன் தரப்பு, எவ்வித சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதால், அந்த மூன்று நபர்களும் தங்களுக்கான தற்காப்பு வாதங்களை முன்வைக்குமாறு உயர் நீதிமன்ற நீதிபதி நீதிபதி உத்தரவிட்டார்.

இரு சகோதர்களான டினேஸ்வரன் காளிதாஸ், பிரியதர்ஷன் காளிதாஸ் மற்றும் ஹரிதரன் ஆறுமுகம் ஆகிய மூவரும் வரும் ஜுலை 22 முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறும் வழக்கு விசாரணையில் தங்கள் தரப்பில் எதிர்வாதம் புரிய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த மூவரும் கடந்த 2023 ஆம் ஆண்டு அந்த அடுக்குமாடி வீட்டில் ஒரு லோரி ஓட்டநரான 31 வயது டார்ஷிகன் முனியாண்டி என்பவரை அடித்து கொலை செய்ததாக அவர்கள் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது கூடிய பட்சம் 40 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் இரு சகோதர்கள் உட்பட மூவரும் கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

முன்னதாக, இக்கொலை தொடர்பில் ஒரு பெண் உட்பட மொத்தம் எட்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மூவர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Related News