Jul 10, 2026
Thisaigal NewsYouTube
7 கிராமத் தலைவர்கள் நியமனம், டத்தோ சிவநேசன் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

7 கிராமத் தலைவர்கள் நியமனம், டத்தோ சிவநேசன் அறிவிப்பு

Share:

பேரா மாநிலத்தில் இந்திய சமூகத்தைச் சேந்த 7 கிராமத் தலைவர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் அறிவித்தார். இந்த நியமனங்கள் கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து இந்த நியமனங்கள் நடைபெற்று வருவதாக சிவநேசன் குறிப்பிட்டார்.

பல இந்திய கிராமங்கள் இருந்தாலும் முதல் கட்டமாக 7 கிராமங்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக டத்தோ சிவநேசன் தெரிவித்தார். முன்பு இந்த நியமனங்கள் வருடாந்திர அடிப்படையில் நடைபெற்றது என்றும் இந்த முறை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது என்றும் அவர்களுக்கு வழங்கக்கூடிய அலவன்ஸ் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளதாக டத்தோ சிவநேசன் விளக்கினார்.

ஊத்தான் மெலிந்தாங், கம்போங் காமாட்சி கிராமத்துக்கு அருள்பிரகாசம் பெருமாள், கம்போங் சுங்கை சுமூன் கிராமத்துக்கு ராமநாயுடு ராமுடு, கம்போங் துன் சம்பந்தன் கிராமத்துக்கு வனஜா இராமசாமி, சித்தியவான், கம்போங் புண்டூட் கிராமத்துக்கு கணேசன் செங்கையா, பகான் செராய் கம்போங் சுன் லீ கிராமத்துக்கு சற்குணன் சுப்பையா, கம்போங் கிந்தாவேலி கிராமத்துக்கு கோபிந்த் கிருஷ்ணசாமி மற்றும் கம்போங் ஹெண்ட்ரா மற்றும் கம்போங் செங்காய் கிராமத்துக்கு செல்வி முனுசாமி நியக்கப்பட்டுள்ளதாக சிவநேசன் விவரித்தார்.

கம்போங் ஹெண்ட்ரா மற்றும் கம்போங் செங்காய் கிராமத்துக்கு செல்வி முனுசாமி மற்றும் கம்போங் புண்டூம் கிராமத்துக்கு கணேசன் செங்கையா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் கிராமத்து மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க கடமைப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.

கிராமத் தலைவர்களாக நியமனம் பெற்ற ஏழு பேரும் டத்தோ சிவநேசனுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

Related News

வெளிநாட்டினர் தொடர்புடைய மோசடி கும்பல்; 1.1 மில்லியன் ரிங்கிட் வங்கிக் கணக்குகளை முடக்கியது எஸ்பிஆர்எம்

வெளிநாட்டினர் தொடர்புடைய மோசடி கும்பல்; 1.1 மில்லியன் ரிங்கிட் வங்கிக் கணக்குகளை முடக்கியது எஸ்பிஆர்எம்

சொத்துச் சேத வழக்கில் தினகரனுக்கு மீண்டும் அபராதம்; மனைவி ரத்னேஸ்வரிக்கு ஜாமீன்

சொத்துச் சேத வழக்கில் தினகரனுக்கு மீண்டும் அபராதம்; மனைவி ரத்னேஸ்வரிக்கு ஜாமீன்

பேராக் இந்தியக் கிராம மேம்பாட்டு நிதி விநியோகம்: 5 மில்லியன் ரிங்கிட் திட்டங்கள் நிறைவு

பேராக் இந்தியக் கிராம மேம்பாட்டு நிதி விநியோகம்: 5 மில்லியன் ரிங்கிட் திட்டங்கள் நிறைவு

லிண்டுங் 24 ஜாம்' திட்டத்தை மாற்ற வேண்டாம்; அரசிடம் யுனி-எம்எல்சி அதிரடி கோரிக்கை

லிண்டுங் 24 ஜாம்' திட்டத்தை மாற்ற வேண்டாம்; அரசிடம் யுனி-எம்எல்சி அதிரடி கோரிக்கை

மூன்று ஆண்டுகள் ஓய்வுக்குப் பின் மீண்டும் வழக்கறிஞராக சட்டப் பணியில் இணைந்தார் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.குணாளன்

மூன்று ஆண்டுகள் ஓய்வுக்குப் பின் மீண்டும் வழக்கறிஞராக சட்டப் பணியில் இணைந்தார் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.குணாளன்

மாணவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற 15 வயது சிறுமி மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது

மாணவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற 15 வயது சிறுமி மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது