எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட அரசு தரப்பு துணை பப்ளிக் பிராசிகியூட்டர் கெவின் மொரைஸ் கொலை வழக்கில் மரணத் தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ மருத்துவமனை மருத்துவர் உட்பட அறுவருக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை புத்ராஜெயா, அப்பீல் நீதிமன்றம் இன்று ஒத்திவைத்துள்ளது.
இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அறுவரில் ஒருவரான டினிஷ்வரன் என்பவரை பிரதிநிதித்து ஆஜராகுவதற்கு கடந்த வாரம்தான் தாம் நியமனம் செய்யப்பட்டதால்,மேல்முறையீட்டு குறிப்புகளை படிப்பதற்கு கால அவகாசம் தேவை என்று வழக்கறிஞர் எம். மனோகரன் செய்து கொண்ட விண்ணப்பத்தைத் தொடர்ந்து மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற நீதிபதி ஹடாரியா ஷெட் இஸ்மாயில் வழக்கு விசாரணையை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
துணை பப்ளிக் பிராசிகியூட்டர் கெவின் மொரைஸ் ஸை கொலை கடத்திச்சென்று மிககொடூரமாக கொலை செய்த குற்றத்திற்காக ஆர். டினிஷ்வரன், வங்சா மாஜு இராணுவ மருத்துவமனையின் முன்னாள் மருத்துவர் ஆர் குனசேகரன்,எஸ்.ரவிச்சந்திரன் ஏகே தினேஷ் குமார், எம் விஷானாத், எஸ் நிமலன் ஆகிய ஐவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் மரணத் தண்டனை விதித்தது.
தங்களுக்கான தண்டனையை எதிர்த்து அந்த அறுவரும் அப்பீல் நீதிமன்றத்தில் செய்து கொண்டு மேல்முறையீடு இன்று விசாரணைக்கு வந்ததது. இவ்வழக்கு விசாரணை வரும் டிசம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.








