May 22, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ்காரர் ரோந்து காரின் மீது தீயிட்ட நபர், நான்கு நாள் தடுப்புக்காவல்
தற்போதைய செய்திகள்

போலீஸ்காரர் ரோந்து காரின் மீது தீயிட்ட நபர், நான்கு நாள் தடுப்புக்காவல்

Share:

பெட்டாலிங் ஜெயா, முதியாரா டமான்சாரா, எம்.ஆர்.டி நிலையத்திற்கு அருகில் போலீஸ்காரர் ரோந்து கார் மீது பெட்ரோல் வெடிகுண்டை வீசி தீயிட்டு கொளுத்திய e-hailing மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் நான்கு நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதுக்குறித்து, பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அந்நபர் 4 நாட்கள் ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ளதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஃபக்ருதீன் அப்துல் ஹமீது தெரிவித்தார்.

26 வயதுடைய அந்நபர் நேற்று முதல் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி திங்கட்கிழமை வரையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக முகமது ஃபக்ருதீன் மேலும் விளக்கினார்.

இச்சம்வம் குறித்து, குற்றவியல் சட்டம் 435 மற்றும் 427 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் அறிவித்தார்.

Related News