Jul 27, 2026
Thisaigal NewsYouTube
அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவரை சாடியது டிஏபி இளைஞர் பிரிவு
தற்போதைய செய்திகள்

அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவரை சாடியது டிஏபி இளைஞர் பிரிவு

Share:

டிஏபி- யின் மூத்த தலைவரும், வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சருமான ங்கா கோர் மிங்- கை, முட்டாள் அமைச்சர் என்று வர்ணித்து இருக்கும் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் முஹம்மட் அக்மால் சாலேஹ்-வை டிஏபி-யின் இளைஞர் பிரிவு இன்று கடுமையாக சாடியது.

தாங்கள் சார்ந்துள்ள கட்சிக்கு அடுத்து தலைமையேற்கக்கூடியவர்க​ள்தான், இளைஞர் பிரிவுத் தலைவர்கள்.அவர்கள், வருகின்ற இளைய தலைமுறையினருக்கு முன்னுதாரண தலைவர்களாக இருந்தால் மட்டுமே அவர்கள் சார்ந்துள்ள கட்சியும் தொடர்ந்து வாழும். போராட்டத்தை முன்னெடுக்க முடியும்.

ஆனால், அவர்கள் பெரியோர்களை மதிக்கும் மாண்பு இல்லாமல் அரசியல் கோணங்கித்தனமாக இருப்பார்களேயானால் அவர்கள் சார்ந்து கட்சியை காப்பாற்ற முடியாது. தற்போது அந்த வேலையைத்தான் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால் சாலேஹ் கன கச்சிதமாக மேற்கொண்டு வருகிறார்.

கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களில் வா​ங்கிய பலத்த அடி, போதாது என்று அடுத்த பொதுத் தேர்தலுக்கும் அடித்தளம் அமைப்பதற்கு அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால் சாலேஹ் கடந்த சில மாதங்களாக சில்லுண்டி வேலைகளை சந்தடியின்றி செய்து வருகிறார். அவர் தனது செயலை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று டிஏபி இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் கெல்வின் யீய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவரை சாடியது டிஏபி இளைஞர் பிரிவு | Thisaigal News