Oct 24, 2026
Thisaigal NewsYouTube

தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த முக்கிய கொள்கை மாற்றங்கள் தேவை: அமைச்சரவையில் அன்வார் வலியுறுத்தல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த முக்கிய கொள்கை மாற்றங்கள் தேவை: அமைச்சரவையில் அன்வார் வலியுறுத்தல்

மலேசியாவின் தொழில்துறை மற்றும் பொருளாதாரத் துறைகளின் வலிமையை அதிகரிக்க, முக்கிய கொள்கை மாற்றங்கள் குறித்து அமைச்சரவை உறுப்பினர்கள் ஆராய வேண்டும் எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக அமைச்சரவை உறுப்பினர்களுடன் இது குறித்து விவாதித்ததாகக் கூறிய அன்வார், மலேசியாவிடம் தேவையான வளங்கள், மனிதவளம், ஒழுக்கம் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் திறன் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சின் தொடர்ச்சியான முயற்சிகளும், தொழில்துறையினருடனான ஒத்துழைப்பும் மலேசியாவை வலிமைமிக்க நாடாக முன்னேற்றும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று இங்குள்ள MITI தலைமையகத்தில் நடைபெற்ற 2026 தொழில்துறை சிறப்பு விருது விழாவில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அதேவேளையில், புதிய தொழில்துறை பெருந்திட்டம், எரிசக்தி மாற்றம் மற்றும் டிஜிட்டல் உருமாற்றம் போன்ற திட்டங்களைச் சுட்டிக் காட்டிய அன்வார், பொருளாதார மற்றும் தேசியக் கொள்கைகளை உருவாக்குவதில் அரசாங்கம் முக்கியப் பங்காற்றுவதாகக் குறிப்பிட்டார்.

இருப்பினும், சிறந்த திட்டங்களை அறிவிப்பது மட்டும் போதாது என்றும், அவற்றைத் திறம்படச் செயல்படுத்துவதற்கான உறுதியும் தெளிவான கொள்கைகளும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →