Oct 24, 2026
Thisaigal NewsYouTube

போலீஸ் காவலில் உயிரிழந்த ஆடவருக்கு உட்புறக் காயங்கள் இல்லை: ஜேஐபிஎஸ்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
போலீஸ் காவலில் உயிரிழந்த ஆடவருக்கு உட்புறக் காயங்கள் இல்லை: ஜேஐபிஎஸ்

செராஸில் போலீஸ் காவலில் இருந்த போது உயிரிழந்த 42 வயது நோரிஸ்வான் ஸுல்கிஃப்லியின் உடலில் உட்புற உறுப்புக் காயங்கள் எதுவும் காணப்படவில்லை என புக்கிட் அமானின் நேர்மை மற்றும் தரநிலை இணக்கத் துறையான ஜேஐபிஎஸ் (JIPS) தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் வைத்திருந்தது, திருட்டு மற்றும் வீடு புகுந்து கொள்ளை முயற்சி தொடர்பான விசாரணைக்காக அவர் கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர், செப்டம்பர் 30-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அக்டோபர் 1-ஆம் தேதி அதிகாலை 1.52 மணிக்கு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உடற்கூறாய்வில் உட்புற உறுப்புகளில் காயங்கள் இல்லை என்றாலும், உடலின் வெளிப்புறத்தில் சில காயங்கள் காணப்பட்டதாக ஜேஐபிஎஸ் இயக்குநர் அய்டா அப்துல் ஹாமிட் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மரணத்திற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், ஆய்வகப் பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வழக்கில் இதுவரை 78 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கு சுயாதீன போலீஸ் நடத்தை ஆணையமான ஐபிசிசியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
போலீஸ் காவலில் உயிரிழந்த ஆடவருக்கு உட்புறக் காயங்கள் இல்ல... | Thisaigal News