Oct 24, 2026
Thisaigal NewsYouTube

அரசியலமைப்பைப் பாதுகாப்பதும் மக்களின் ஒற்றுமையைக் காப்பதும் ஆட்சியாளரின் கடமை: சிலாங்கூர் சுல்தான்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அரசியலமைப்பைப் பாதுகாப்பதும் மக்களின் ஒற்றுமையைக் காப்பதும் ஆட்சியாளரின் கடமை: சிலாங்கூர் சுல்தான்

சமூகம் காலத்திற்கேற்ப மாறினாலும், அரசியலமைப்பில், சுல்தானின் அடிப்படைப் பொறுப்புகள் எதுவும் மாறுவதில்லை என மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பைப் பாதுகாப்பது, ஆட்சியின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவது, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து மக்களின் ஒற்றுமைக்கு அடையாளமாகத் திகழ்வது ஆகியவை ஆட்சியாளரின் முக்கியப் பொறுப்புகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாற்றங்கள் நிகழும் காலங்களில் முடியாட்சி நிலைத்தன்மையை வழங்குவதுடன், நாட்டின் நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்காற்றுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிலாங்கூர் அரியணையில் அமர்ந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு வழங்கிய சிறப்புரையில் சுல்தான் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், சிலாங்கூர் மக்களின் பின்னணி அல்லது அரசியல் நம்பிக்கைகளைப் பொருட்படுத்தாமல், அனைவருக்கும் பாரபட்சமின்றிச் சேவையாற்றுவதே தமது பொறுப்பு என்றும் சுல்தான் உறுதியளித்துள்ளார்.

இதனிடையே, அரசியலமைப்புக் கொள்கைகள், நடுநிலைமை மற்றும் நியாயத்தை மதிப்பதன் மூலம் முடியாட்சி அனைத்து மக்களாலும் நம்பப்படும் அமைப்பாகத் தொடர்ந்து விளங்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளையில் தலைமைத்துவம் என்பது சலுகைகளை அனுபவிப்பதற்கானது அல்ல; பொறுப்புகளை ஏற்றுச் செயல்படுவதற்கானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →