Oct 23, 2026
Thisaigal NewsYouTube

வேஸ் செயலிக்குத் தடை: பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டால் மன்னிப்புக் கோரும் அன்வார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வேஸ் செயலிக்குத் தடை: பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டால் மன்னிப்புக் கோரும் அன்வார்

வேஸ் வழிகாட்டிச் செயலிக்குத் தடை விதிக்கும் முடிவால் பொதுமக்களுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டிருந்தால் மன்னிப்புக் கோருவதாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட முகநூல் பதிவில், நாட்டின் இறையாண்மையையும் மக்களின் தனிப்பட்ட தகவல்களையும் பாதுகாப்பது அவசியம் என்றும், தேசியப் பாதுகாப்பில் எந்தச் சமரசமும் செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாற்றுச் செயலிகளின் திறனை அரசாங்கம் மதிப்பீடு செய்த பிறகு, வேஸ் பயன்பாட்டுக்கு முழுமையான தடை விதிப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும். தற்போது அரசுப் பணிகளை மேற்கொள்ளும்போது அரசு ஊழியர்கள் வேஸ் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →