மலேசியக் குடும்பங்கள் வீட்டில் உணவு தயாரிப்பதைவிட வெளியே உணவருந்துவதற்கே அதிகம் செலவிடுவதாக கசானா ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டில், குடும்பங்கள் வெளியே உணவருந்த மாதம் சராசரியாக 902 ரிங்கிட் 70 சென் செலவிட்டுள்ளன. வீட்டில் சாப்பிடுவதற்கான உணவுப் பொருட்களுக்கு 875 ரிங்கிட் 80 சென் செலவிடப்பட்டுள்ளதாக அதன் 2026ஆம் ஆண்டு குடும்பநிலை அறிக்கை கூறுகிறது.
இதற்கிடையே, 2023ஆம் ஆண்டில் மலேசியப் பெரியவர்களில் 54.4 விழுக்காட்டினர் அதிக உடல் எடை அல்லது உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருந்தனர். உடற்பயிற்சிக் குறைவு, பழங்கள் மற்றும் காய்கறிகளைப் போதிய அளவு உட்கொள்ளாமை ஆகியவையும் கவலைக்குரிய போக்குகளாக அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.








