அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலே, ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக்கிற்கு வழங்க வேண்டிய 3 லட்சம் ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையில் ஒரு பகுதியைச் செலுத்த, தனது மோட்டார் சைக்கிளையும் திலாப்பியா மீன்களையும் விற்று சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் ரிங்கிட் திரட்டியுள்ளார்.
தனது X-ADV மோட்டார் சைக்கிள் 1 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட்டுக்கும், குளத்திலிருந்த மீன்கள் சுமார் 30 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் விற்பனையானதாக அவர் சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார். குடும்பச் சேமிப்பையும் சேர்த்து, இழப்பீட்டுத் தொகை மற்றும் வழக்கறிஞர் செலவுகளை அடுத்த வாரத்துக்குள் செலுத்த எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
தன்னைப் பற்றிய அவதூறு வழக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மலாக்கா உயர் நீதிமன்றம், திரேசா கோக்கிற்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடும், 50 ஆயிரம் ரிங்கிட் வழக்கறிஞர் செலவும் வழங்க அக்மாலுக்கு உத்தரவிட்டது.








