Oct 23, 2026
Thisaigal NewsYouTube

மலாக்காவில் மோசடி மையமாகச் செயல்பட்ட ஹோம்ஸ்டே: 34 பேர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்காவில் மோசடி மையமாகச் செயல்பட்ட ஹோம்ஸ்டே: 34 பேர் கைது

தென் கொரியர்களை போலி முதலீட்டுத் திட்டங்கள் மூலம் ஏமாற்றியதாகச் சந்தேகிக்கப்படும் கும்பல் செயல்பட்ட ஹோம்ஸ்டே ஒன்றில் குடிநுழைவுத் துறை நடத்திய சோதனையில், 31 சீனர்கள், தைவானியர் ஒருவர், மலேசியர்கள் இருவர் என மொத்தம் 34 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தக் கும்பல் மூன்று மாதங்களாகச் சமூக ஊடகங்கள் மற்றும் தகவல் பரிமாற்றச் செயலிகள் மூலம் குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி மோசடியில் ஈடுபட்டதாகக் குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்தார்.

சோதனையில் 309 கைப்பேசிகள், 45 கணினிகள் உள்ளிட்ட 3 லட்சத்து 18 ஆயிரத்து 600 ரிங்கிட் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட வெளிநாட்டினரில் சிலர் முறையான பயண ஆவணங்கள் இன்றி தங்கியிருந்ததாகவும் விசாரணை நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →