2021ஆம் ஆண்டு கூட்டரசு நெடுஞ்சாலையில் எதிர்திசையில் வாகனம் ஓட்டி இரு இளைஞர்களின் உயிரிழப்புக்குக் காரணமானவர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட 29 வயது கே. டேவாஸ்வினுக்கு எதிரான கொலைக் குற்றச்சாட்டு திருத்தப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு 9 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஷா ஆலம் உயர் நீதிமன்ற நீதிபதி புபிந்தர் சிங், கொலைக் குற்றத்தை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டதாகக் கூறி, குற்றச்சாட்டை கொலைக்குச் சமமில்லாத மரணத்தை ஏற்படுத்திய குற்றமாகத் திருத்தினார். திருத்தப்பட்ட குற்றச்சாட்டை டேவாஸ்வின் ஒப்புக் கொண்டார்.
டேவாஸ்வினுக்கு மொத்தம் 60,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது. சிறைத்தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 2021 செப்டம்பர் 12ஆம் தேதி அதிகாலை, கூட்டரசு நெடுஞ்சாலையின் 8.6ஆவது கிலோமீட்டரில், எதிர்த்திசையில் வந்த அவரது வாகனம் மோதியதில் 19 வயது ஹாஃபிஸ் ஷாமிர் ஸுல் அஸ்ரி மற்றும் 18 வயது நூர் அஃபிகா அப்துல் காரிம் ஆகியோர் உயிரிழந்தனர்.








