Oct 23, 2026
Thisaigal NewsYouTube

கோல்ஃப் மைதானத்துக்குள் புகுந்த 250 கிலோ தபீர் பிடிபட்டது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கோல்ஃப் மைதானத்துக்குள் புகுந்த 250 கிலோ தபீர் பிடிபட்டது

திரங்கானு, கெர்தேவில் உள்ள பெட்ரோனாஸ் கோல்ஃப் மற்றும் பொழுதுபோக்கு மையத்திற்குள் வழிதவறி நுழைந்த சுமார் 250 கிலோ எடையுள்ள ஆண் தபீர், நேற்று பிடிக்கப்பட்டு மீண்டும் காட்டுக்குள் விடப்பட்டது.

காலை 11 மணிக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, கெமாமானில் இருந்து வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்காக்கள் பாதுகாப்புத் துறையின் நான்கு அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டனர். டிரோன் மூலம் தபீரின் இருப்பிடத்தைக் கண்டறிந்து, பிற்பகல் 12.30 மணிக்கு அதைப் பிடிக்கும் பணியைத் தொடங்கினர்.

160 சென்டிமீட்டர் நீளமுள்ள அந்தத் தபீர், உடல்நலத்துடன் காயமின்றி இருந்ததாகத் திரங்கானு வனவிலங்கு பாதுகாப்புத் துறை இயக்குநர் டென்னிஸ் டென் சூன் யுங் தெரிவித்தார். சம்பவ இடம், புக்கிட் பாலுஸ் வனக் காப்பகத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →