Oct 24, 2026
Thisaigal NewsYouTube

வாகனங்களைப் பதிவு செய்ய முதிய மலேசியப் பெண்களைத் திருமணம் செய்யும் வெளிநாட்டினர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வாகனங்களைப் பதிவு செய்ய முதிய மலேசியப் பெண்களைத் திருமணம் செய்யும் வெளிநாட்டினர்

அந்நிய நாட்டவர்கள், வாகனங்களைத் தங்கள் பெயரில் பதிவு செய்வதற்கான கடுமையான நடவடிக்கைகளைத் தவிர்க்க, 60 வயதுக்கு மேற்பட்ட மலேசியப் பெண்களை குறிப்பாக மூதாட்டிகளை திருமணம் செய்யும் உத்தியை கையாண்டு வருவதாக சாலைப் போக்குவரத்துத் துறையான ஜேபிஜே தெரிவித்துள்ளது.

கணவனை இழந்தவர்கள், தனித்து வாழும் தாய்மார்கள், மற்றும் திருமணமாகாத பெண்கள் மற்றும் மூதாட்டிகளை இலக்காக கொண்டு திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து, அவர்களின் பெயர்களில் வாகனங்களைப் பதிவு செய்வதாக ஜேபிஜேவின் மூத்த அமலாக்க இயக்குநர் டத்தோ முஹமட் கிஃப்லி மா ஹாசான் தெரிவித்தார். கடந்த ஜூலை மாதம் முதல் வெளிநாட்டினருக்கு எதிரான அமலாக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் புதிய உத்தி கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.

புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ஓப் பேவா’ நடவடிக்கையின்கீழ் வாகன ஓட்டுநர் மட்டுமின்றி, வாகன உரிமையாளரும் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.

சம்பந்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதத் தொகையைச் செலுத்தி வழக்கிலிருந்து தப்பிக்க அனுமதிக்கப்பட மாட்டாது; நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஏகேபிஎஸ் தலைவரின் பதவி நிலை: மூத்த அரசு அதிகாரிகள் முடிவெடுப்பர்

ஏகேபிஎஸ் தலைவரின் பதவி நிலை: மூத்த அரசு அதிகாரிகள் முடிவெடுப்பர்

புதிய தலைமுறை மைகார்டு: முதல் மாதத்தில் 2.75 லட்சத்துக்கும் மேற்பட்ட அடையாள அட்டைகள் விநியோகம்

புதிய தலைமுறை மைகார்டு: முதல் மாதத்தில் 2.75 லட்சத்துக்கும் மேற்பட்ட அடையாள அட்டைகள் விநியோகம்

ஜாலான் அம்பாங் இரவு விடுதியில் குடிநுழைவுத் துறை அதிரடி: 68 வெளிநாட்டினர் கைது

ஜாலான் அம்பாங் இரவு விடுதியில் குடிநுழைவுத் துறை அதிரடி: 68 வெளிநாட்டினர் கைது

தடுப்புக் காவல் மரணம்: வெளிப்படையான, முழுமையான விசாரணைக்கு அன்வார் உத்தரவு

தடுப்புக் காவல் மரணம்: வெளிப்படையான, முழுமையான விசாரணைக்கு அன்வார் உத்தரவு

தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த முக்கிய கொள்கை மாற்றங்கள் தேவை: அமைச்சரவையில் அன்வார் வலியுறுத்தல்

தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த முக்கிய கொள்கை மாற்றங்கள் தேவை: அமைச்சரவையில் அன்வார் வலியுறுத்தல்

அரசியலமைப்பைப் பாதுகாப்பதும் மக்களின் ஒற்றுமையைக் காப்பதும் ஆட்சியாளரின் கடமை: சிலாங்கூர் சுல்தான்

அரசியலமைப்பைப் பாதுகாப்பதும் மக்களின் ஒற்றுமையைக் காப்பதும் ஆட்சியாளரின் கடமை: சிலாங்கூர் சுல்தான்