Oct 24, 2026
Thisaigal NewsYouTube

தடுப்புக் காவல் மரணம்: வெளிப்படையான, முழுமையான விசாரணைக்கு அன்வார் உத்தரவு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தடுப்புக் காவல் மரணம்: வெளிப்படையான, முழுமையான விசாரணைக்கு அன்வார் உத்தரவு

போலீஸ் காவலில் உயிரிழந்த 42 வயது நூரிஸ்வான் ஸுல்கிஃப்லி மரணம் தொடர்பில், எவ்வித சமரசமுமின்றி முழுமையான, வெளிப்படையான விசாரணை நடத்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் போலீஸ் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இன்று தம்மிடம் மேல்முறையீட்டு மனு அளிக்க வந்த உயிரிழந்தவரின் குடும்பத்தினரின் துயரத்தையும் வேதனையையும் புரிந்து கொள்வதாகவும், அவரது மரணத்துக்கான காரணங்களை அறியக் குடும்பத்தினர் காத்திருப்பதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது ஃபேஸ்புக் பதிவில் இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி கைது செய்யப்பட்ட நூரிஸ்வான், செராஸ் போலீஸ் தலைமையகத்தில் 11 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவரது கைது மற்றும் தடுப்புக் காவல் குறித்து தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை எனக் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். செப்டம்பர் 30ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், அக்டோபர் 1ஆம் தேதி அதிகாலை 1.52 மணிக்கு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
வாகனங்களைப் பதிவு செய்ய முதிய மலேசியப் பெண்களைத் திருமணம் செய்யும் வெளிநாட்டினர்

வாகனங்களைப் பதிவு செய்ய முதிய மலேசியப் பெண்களைத் திருமணம் செய்யும் வெளிநாட்டினர்

ஏகேபிஎஸ் தலைவரின் பதவி நிலை: மூத்த அரசு அதிகாரிகள் முடிவெடுப்பர்

ஏகேபிஎஸ் தலைவரின் பதவி நிலை: மூத்த அரசு அதிகாரிகள் முடிவெடுப்பர்

புதிய தலைமுறை மைகார்டு: முதல் மாதத்தில் 2.75 லட்சத்துக்கும் மேற்பட்ட அடையாள அட்டைகள் விநியோகம்

புதிய தலைமுறை மைகார்டு: முதல் மாதத்தில் 2.75 லட்சத்துக்கும் மேற்பட்ட அடையாள அட்டைகள் விநியோகம்

ஜாலான் அம்பாங் இரவு விடுதியில் குடிநுழைவுத் துறை அதிரடி: 68 வெளிநாட்டினர் கைது

ஜாலான் அம்பாங் இரவு விடுதியில் குடிநுழைவுத் துறை அதிரடி: 68 வெளிநாட்டினர் கைது

தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த முக்கிய கொள்கை மாற்றங்கள் தேவை: அமைச்சரவையில் அன்வார் வலியுறுத்தல்

தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த முக்கிய கொள்கை மாற்றங்கள் தேவை: அமைச்சரவையில் அன்வார் வலியுறுத்தல்

அரசியலமைப்பைப் பாதுகாப்பதும் மக்களின் ஒற்றுமையைக் காப்பதும் ஆட்சியாளரின் கடமை: சிலாங்கூர் சுல்தான்

அரசியலமைப்பைப் பாதுகாப்பதும் மக்களின் ஒற்றுமையைக் காப்பதும் ஆட்சியாளரின் கடமை: சிலாங்கூர் சுல்தான்