May 21, 2026
Thisaigal NewsYouTube
ரேப்பிட் கேஎல் பஸ் தீப்பிடித்தது
தற்போதைய செய்திகள்

ரேப்பிட் கேஎல் பஸ் தீப்பிடித்தது

Share:

கோலாலம்பூர் ஜன,30
இன்று ஜாலான் அம்பாங்கில் உள்ள பேரங்காடிக்கு முன்புறம் ஆறு பயணிகளை ஏற்றிச் சென்ற ரேப்பிட் கேஎல் பஸ்ஸில் தீப்பிடித்தது.

தாமான் மூலியா ஜெயாவில் இருந்து லெபோ அம்பாங் செல்லும் பேருந்து காலை 10.52 மணிக்கு தீப்பிடித்தது என ரேப்பிட் பஸ் எஸ்டிஎன் பிஎச்டி நிறுவனம் இன்றி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

பேருந்தின் பின்பகுதியில் இருந்து புகையை கண்ட பஸ்ஸின் கேப்டன், பயணிகளை இறக்கி தீயை அணைக்கும் கருவியைப் பயன்படுத்தி தீ பரவாமல் கட்டுப்படுத்த முயன்றார்.

இச்சம்பவத்தில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.
சம்பந்தப்பட்ட பஸ் மதியம் 12.08 மணியளவில் டிப்போவிற்கு இழுத்துச் செல்லப்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டது. .

பாதிக்கப்பட்ட பயணிகளிடம் மன்னிப்பு கேட்ட ரேபிட் பஸ், தீ விபத்துக்கான காரணத்தை கண்டறியும் விசாரணையில் போலீசாருக்கு ஒத்துழைப்பதாகவும் கூறியது.

Related News