Jul 27, 2026
Thisaigal NewsYouTube
இணையப் பாதுகாப்பு சட்ட மசோதா, விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல்
தற்போதைய செய்திகள்

இணையப் பாதுகாப்பு சட்ட மசோதா, விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல்

Share:

கோலாலம்பூர், மார் ச்19 -

இணைய பாதுகாப்பு சட்ட மசோதாவின் வரைவு குறித்த கலந்துரையாடல் தற்போது நடைபெற்று வருகிறது. அது நிறைவு பெற்றதும் அச்சட்ட மசோதா அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இப்புதிய சட்ட மசோதாவின் உருவாக்கம் குறித்து அமைச்சரவை முடிவு செய்துள்ளதாகவும், அச்சட்டத்தின் தேவைகளை ஆய்வு செய்ய தொடர்பு அமைச்சு மற்றும் பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவு ஆகியவற்றுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தொடர்பு துணையமைச்சர் Teo Nie Ching தெரிவித்தார்.

"புதிய சட்டத்தை ஆய்வு செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மசோதா அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டு வரப்படலாம்…அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன" என்று மக்களவையில் கேள்வி பதில் நேரத்தின் போது கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான Teo Nie Ching குறிப்பிட்டார்..

"சமூக ஊடகங்களில் பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களை முதல் தகவல் அறிக்கையாக உருவாக்குவதுடன், இணையப் பாதுகாப்பு தொடர்பான சட்டத்தை அமல்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளதா"? என்று மக்களவையில் தும்பாட் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்துக் மும்தாஸ் ம்டி னாவி எழுப்பிய கேள்விக்கு Teo Nie Ching இவ்வாறு பதிலளித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்