Oct 6, 2026
Thisaigal NewsYouTube

கார் மரத்தில் மோதி ஆடவர் பலி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கார் மரத்தில் மோதி ஆடவர் பலி

கோத்தா திங்கி, செப்டம்பர்.06-

ஆடவர் ஒருவர் பயணித்த கார் ஒன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி, அருகில் உள்ள மரத்தில் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தத் துயரச் சம்பவம் நேற்று பிற்பகல் 3.35 மணியளவில் கோத்தா திங்கி, ஜாலான் பண்டார் பெனவார் புங்கை என்ற இடத்தில் நிகழ்ந்தது.

இதில் 19 வயதுடைய எஸ். சத்தீஷ்வரன் என்ற இளைஞர் கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் யுசோஃப் ஒத்மான் தெரிவித்தார்.

சத்திஷ்வரன் பயணித்த புரோட்டோன் வீரா காரின் இடிபாடுகளிலிருந்து அவரின் உடலை மீட்க தீயணைப்பு, மீட்புப் படையின் உதவி நாடப்பட்டதாக யுசோஃப் ஒத்மான் குறிப்பிட்டார்.

சவப் பரிசோதனைக்காக அந்த இளைஞரின் உடல், கோத்தா திங்கி மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான பள்ளிச்சூழல் வேண்டும் – சுஹாகாம் வலியுறுத்து

ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான பள்ளிச்சூழல் வேண்டும் – சுஹாகாம் வலியுறுத்து

பட்டதாரிகளின் குறைந்த தொடக்க ஊதியத்தை 2027 வரவு செலவுத் திட்டம் தீர்க்க வேண்டும் – டத்தோ கமலநாதன்

பட்டதாரிகளின் குறைந்த தொடக்க ஊதியத்தை 2027 வரவு செலவுத் திட்டம் தீர்க்க வேண்டும் – டத்தோ கமலநாதன்

“அவர்  இனி இல்லை என்பதை என்னால் ஏற்க முடியவில்லை” – காதலனால் கழுத்து நெரிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவியின் தோழி கதறல்

“அவர் இனி இல்லை என்பதை என்னால் ஏற்க முடியவில்லை” – காதலனால் கழுத்து நெரிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவியின் தோழி கதறல்

அடித்தள வாகன நிறுத்துமிடத்தில் கார் தீப்பிடிப்பு; 3 பெண்களுக்கு மூச்சுத் திணறல்

அடித்தள வாகன நிறுத்துமிடத்தில் கார் தீப்பிடிப்பு; 3 பெண்களுக்கு மூச்சுத் திணறல்

இசிஆர்எல் பயணக் கட்டணம் இம்மாதம் அறிவிப்பு; நவம்பரில் டிக்கெட் விற்பனை

இசிஆர்எல் பயணக் கட்டணம் இம்மாதம் அறிவிப்பு; நவம்பரில் டிக்கெட் விற்பனை

அக்டோபர் 9 முதல் பருவமழை இடைக்கால மாற்றம்; இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு

அக்டோபர் 9 முதல் பருவமழை இடைக்கால மாற்றம்; இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு