Johor Bahru, Tampoi - யில் உள்ள சந்தை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட Op Kesan 2.0 திடீர் சோதனையின் மூலம் சில அந்நிய வியாபாரிகளின் நடவடிக்கை வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டது.
சம்பந்தப்பட்ட சந்தையை சோதனையிட்ட வேளை, விலை பட்டியல் இல்லாமல் காய்கறிகளை விற்பனை செய்யும் அந்நிய வியாபாரிகளின் செயல்கள் கண்டறியப்பட்டதாக Johor, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்கை செலவின அமைச்சகத்தின் இயக்குநர் Lilis Saslinda Pornomo தெரிவித்தார்.
வெளிநாட்டு வியாபாரிகள் விற்கப்படுகின்ற காய்கறிகளில் விலை குறியீடு எதுவும் இல்லாததாகவும் பொருட்களுக்கு உடனடியாக விலை பட்டியல் வைக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் Lilis Saslinda அறிவித்தார்.
மேலும், அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள இலக்குரிய டீசலுக்கான உதவித்தொகையை கொண்டு பொருட்களின் விலையை சுய விருப்பத்திற்கு அதிகரிக்கும் வியாபாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் வலியுறுத்தினார்.








