Jul 27, 2026
Thisaigal NewsYouTube
இரு வெவ்வேறு சாலை விபத்துகளில் மூவர் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

இரு வெவ்வேறு சாலை விபத்துகளில் மூவர் உயிரிழந்தனர்

Share:

கோலா கிராய், ஏப்ரல் 25-

கிளந்தான், கோலா கிராய்-யில் நிகழ்ந்த இரு வெவ்வேறு சாலை விபத்துகளில் மூவர் உயிரிழந்தனர்.

நேற்று மதியம் 12.30 அளவில் ஜம்பாத்தான் தோசெங் சுங்கை பத்து எனுமிடத்தில் நிகழ்ந்த முதல் சம்பவத்தில், 20 வயதுடைய இளைஞர் ஒருவர் செலுத்திய யமாஹா Y15ZR மோட்டார்சைக்கிள், வேகக்கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்திலுள்ள மரம் ஒன்றை மோதியது.

அதில், படுங்காயங்களுக்கு இலக்கான அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக, கோலா கிராய் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் மஸ்லான் மாமாட் தெரிவித்தார்.

மற்றொரு விபத்தில், ஜம்பாத்தான் பாஹி அருகேயுள்ள ஜாலான் கோத்தா பாரு - குவா முசாங் சாலையின் 76ஆவது கிலோமீட்டரில் வாகனத்தில் பயணித்த தம்பதியர் உயிரிழந்தனர்.

54 வயதுடைய ஆடவர் செலுத்திய ஹோண்டா ரக வாகனம், வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் எதிர்தடத்தில் நுழைந்ததோடு, இடது புறத்திலுள்ள தடுப்பை மோதி விபத்துக்குள்ளானது.

சம்பவத்தின் போது வாகனத்திலிருந்து தூக்கியெறியப்பட்ட 50 வயதுடைய மனைவியும் வாகனத்தினுள் சிக்கிக் கொண்ட அவ்வாடவரும் கடும் காயங்களுக்கு இலக்கானதாக, மஸ்லான் மாமாட் கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்