May 22, 2026
Thisaigal NewsYouTube
அந்த காமுகர் கைது செய்யப்பட்டார்
தற்போதைய செய்திகள்

அந்த காமுகர் கைது செய்யப்பட்டார்

Share:

பினாங்கு, மார்ச் 8 -

பினாங்கு, ஜார்ஜ்டவுன், கொம்ப்லேக்ஸ் புக்கிட் ஜாம்பூல் வர்த்தகத் தளத்தில் 7 வயது சிறுமியிடம் ஆபாச சேட்டைப் புரிந்ததாக நம்பப்படும் 30 வயது நோபாளிய ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

எந்தவொரு பயண ஆவணமும் இல்லாத அந்த நேபாளிய ஆடவர், நேற்று மாலை 6.50 மணிளவில் அந்த வர்த்தகத் தளத்தின் பின்புறம் கைது செய்யப்பட்டதாக பினாங்கு தீமுர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி ராஸ்லாம் அப்துல் ஹாமிட் தெரிவித்தார்.

அந்த சிறுமி, பணம் செலுத்தும் முகப்பிட வரிசையில் நின்று கொண்டு இருந்த போது அந்த ஆடவர், .இந்த ஆபாச சேட்டையைப் புரிந்ததாக கூறப்படுகிறது.

தன் கண் எதிரே தனது மகளுக்கு நேர்ந்த இச்சம்பத்தை பார்த்த அந்த சிறுமியின் தாயார் பொது மக்களின் உதவியைத் தொடர்ந்து அந்த நேபாளிய ஆடவர், வளைத்துப்பிடிக்கப்பட்டு, பொது மக்களால் நையப் புடைக்கப்பட்டு, போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஏ.சி.பி.ராஸ்லாம் தெரிவித்தார்.

Related News