May 21, 2026
Thisaigal NewsYouTube
அம்மோனியா வாயு கசிவு
தற்போதைய செய்திகள்

அம்மோனியா வாயு கசிவு

Share:

இன்று காலை, பேரா மாநில கனிமவளம், புவி அறிவியல் துறையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது. அந்தக் கசிவைக் கட்டுப்படுத்த பாசீர் பூத்தே தீயணைப்பு - மீட்பு நிலையத்தின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக பேரா மாநில தீயணைப்பு - மீட்புப் படையின் உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார்.

இலாகாவில் வைக்கப்பட்டுள்ள அம்மோனியா வாயு கொள்கலனிலிருந்து கசிவு ஏற்பட்டதாகவும் அதன் விளைவாக வேறு ஏதும் சம்பவங்கள் நிகழ்ந்ததா எனவும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

குறிப்பிட்ட வளாகத்தின் காற்றோடு அம்மோனியா வாயு கலந்திருந்தது முற்றிலும் கரைந்து விட்டதை உறுதி செய்த பின்னரே அப்பகுதி மீண்டும் வழக்கு நிலைமைக்குத் திரும்பியது என Sabarodzi கூறினார்.

Related News