Jul 29, 2026
Thisaigal NewsYouTube
படிவம் 5 மாணவர் விபத்தில் பலி
தற்போதைய செய்திகள்

படிவம் 5 மாணவர் விபத்தில் பலி

Share:

ஆலோர் ஸ்டார்,ஜன.30
ஆலோர் ஸ்டார், கம்போங் டலாம் கோத்தா,ஜாலான் தெலுக்கில் நேர்ந்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த 17 வயது மாணவரை லாரி ஒன்று மோதியதில் அம்மாணவர் சம்பவ இடத்திலேயே உயிர் துறந்தார்.

இது குறித்து பேசிய கோத்தா ஸ்தார் போலீஸ் தலைவர் எசிஸ்தன் கமிஷ்னர் அஹ்மாட் ஷுக்ரி மாட் ஆகிர் தெரிவிக்கயில், இன்று காலை நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தது ஜித்ரா, பண்டார் டாரும் ஆமான் இடைநிலைப் பள்ளியில் படிவம் 5 படிக்கும் கைரி ரசின் பசிரா எனும் மாணவர் ஆவார் என்றார்,

உயிரிழந்த கைரி ரசின் பசிரா சடலம் சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டது.

Related News