May 22, 2026
Thisaigal NewsYouTube
வேண்டுமென்றே பூனைக்கு மரணத்தை விளைவித்ததாக பலகார வியாபாரி மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

வேண்டுமென்றே பூனைக்கு மரணத்தை விளைவித்ததாக பலகார வியாபாரி மீது குற்றச்சாட்டு

Share:

பினாங்கு, ஜூன் 06-

கடந்த மே 31 ஆம் தேதி வேண்டுமென்றே பூனை ஒன்றுக்கு மரணத்தை விளைவித்ததாக பலகார வியாபாரி ஒருவர் ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

47 வயது ஃபைசுல் அஸ்லான் ரிட்ஜுவான் என்ற அந்த பலகார வியாபாரி மாஜிஸ்திரேட் நத்ரதுன் நைம் முகமது சைதி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அவர் அக்குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் குற்றவியல் சட்டம் 428 ஆவது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த மே 31 ஆம் தேதி காலை 8.30 மணியளவில் பினாங்கு, தீமோர் லாவுட், கோத்தா கியாம் -மில் வேண்டுமென்றே பூனை ஒன்றை சாக்கு பையினுள் போட்டு, பள்ளத்திலிருந்து தூக்கி எறிந்து அப்பூனைக்கு மரணம் விளைவித்ததாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

முன்னதாக, சிலர் பள்ளத்தில் எறியப்பட்டிருந்த சாக்கு மூட்டையிலிருந்து பூனையின் உடலை கண்டெடுப்பதை காட்டும் 66 வினாடி கொண்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

Related News