Jul 27, 2026
Thisaigal NewsYouTube
10 கிலோ எடை குறைந்த மலையேற்ற வீராங்கனை ஜாஸ்லிண்டா மீட்பு
தற்போதைய செய்திகள்

10 கிலோ எடை குறைந்த மலையேற்ற வீராங்கனை ஜாஸ்லிண்டா மீட்பு

Share:

தாப்பா, குனோங் பத்து பூத்தே மலையில் கடந்த மே 24 அன்று காணாமல் போன 49 வயது மலையேற்ற வீராங்கனை ஜாஸ்லிண்டா சாலுடின், இரண்டு வாரங்களுக்குப் பிறகு பழங்குடியின மக்களால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். காட்டில் உணவின்றி தவித்ததால் அவர் சுமார் 10 கிலோ வரை உடல் எடை குறைந்துள்ளார்.

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தற்போது தாப்பா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நல்ல மன உறுதியுடன், பேசுவதற்கும் உணவு உண்பதற்கும் ஆரோக்கியமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வான் இம்மி சலிம் தெரிவித்துள்ளார்.

பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களான டத்தோ அ. சிவநேசன் மற்றும் அஸ்லான் ஹெல்மி ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது நலம் குறித்து விசாரித்தனர். ஜாஸ்லிண்டா விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்