Sep 26, 2026
Thisaigal NewsYouTube
ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்
தற்போதைய செய்திகள்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

Share:

கோலாலம்பூர், மே.05-

1.1 பில்லியன் ரிங்கிட் முதலீட்டு ஒப்பந்தம் தொடர்பான விசாரணையில் இன்று ஆஜரான முன்னாள் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி, சுமார் ஏழு மணி நேரங்கள் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இன்று காலை 10 மணியளவில் புத்ராஜெயாவிலுள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்கு ரஃபிஸி வருகை புரிந்ததாகவும், அவரிடம் மாலை 7 மணி வரையில் தொடர் விசாரணை நடைபெற்றதாகவும் எஸ்பிஆர்எம் மூத்த விசாரணை இயக்குநர் ஹஃபாஸ் நஸார் தெரிவித்துள்ளார்.

பிகேஆர் கட்சியின் பண்டான் நாடாளுமன்ற உறுப்பினரான ரஃபிஸி, தொடர்ந்து மூன்றாவது நாளாக விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.

இந்நிலையில், நாளை பிற்பகலில் மீண்டும் எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்கு விசாரணைக்காக அவர் வருவார் என ஹஃபாஸ் நஸார் தெரிவித்துள்ளார்.

Related News