இறக்குமதி செய்யப்படும் பச்சரிசி விலை உயர்வு கண்டிருப்பதைத் தொடர்ந்து உள்ளூர் விளைச்சல் பச்சரிசியில் ஒருவர், கூடிய பட்சம் 100 கிலோ அல்லது 10 கிலோ எடை கொண்ட 10 பாக்கெட் அரிசி மட்டுமே வாங்குவதற்கு அனுமதிக்கப்படும்.
இந்த புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது என்று விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் நெல் தொழில்த்துறை பிரிவின் தலைவர் அஸ்மான் மஹ்மூத் அறிவித்துள்ளார்.
வியாபாரிகள் ஒரே நேரத்தில் 500 முதல் 700 சிப்பு பச்சரிசி வாங்குவது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதால் இந்த புதிய நடைமுறையை அறிமுகம்ப்படுத்தபட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் மூலம் ஒருவர் தனது தனிப்பட்ட குடும்பத் தேவைக்கு அப்பாற்பட்ட நிலையில் கூடுதலாக பச்சரிசையை வாங்குவதோ அல்லது அதனை பதுக்குவதோ தடுக்கப்படும் என்று அஸ்மான் மஹ்மூத் தெரிவித்தார்.

Related News

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்


