Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சைப்ரஸில் உள்ள ஜோ லோவின் ஆடம்பர வில்லா வீட்டை பறிமுதல் செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தற்போதைய செய்திகள்

சைப்ரஸில் உள்ள ஜோ லோவின் ஆடம்பர வில்லா வீட்டை பறிமுதல் செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Share:

மலேசியாவின் ஒன்எம்டிபி நிதி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான ஜோ லோவிற்கு சொந்தமான ஆடம்பர வில்லா வீட்டை பறிமுதல் செய்ய சைப்ரஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணமோசடி தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சைப்ரஸ் அரசு மற்றும் அந்நாட்டின் பணமோசடி தடுப்பு பிரிவு இணைந்து தாக்கல் செய்த மனுவை ஏற்று நிகோசியா மாவட்ட நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. ஜோ லோவின் வழக்கறிஞர்களும் இந்த பறிமுதல் நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.

சைப்ரஸின் அய்யா நாபா கடற்கரை நகரில் அமைந்துள்ள இந்த வில்லாவின் மதிப்பு சுமார் 30.5 மில்லியன் மலேசிய ரிங்கிட் ஆகும். சைப்ரஸ் வரலாற்றிலேயே, குற்றவியல் தண்டனை ஏதுமின்றி ஒருவரது சொத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது இதுவே முதல் முறையாகும்.

ஒன்எம்டிபி நிதியத்திலிருந்து சுமார் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை மோசடி செய்ததாக ஜோ லோ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு சைப்ரஸ் குடியுரிமை பெற்ற இவரது கடப்பிதழ் 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்