நாட்டின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான ஜோகூர் பாரு, சுல்தானா அமினா மருத்துவமனையின் மறுகட்டமைப்பின் முதலாவது கட்டத் திட்டத்திற்கு 50 கோடி வெள்ளி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
சுல்தானா அமினா மருத்துவமனை, மறு கட்டமைப்பின் மூலமாக புதிய கட்டடத் தொகுதிகளையும், அடுக்குமாடி கார் நிறுத்தும் இடங்களையும் கொண்டு இருக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
நிதி அமைச்சுடன் கலந்து ஆலோசித்தப் பின்னர் இந்த பெரும் திட்டத்தின் முதலாவது கட்டமைப்புக்கு 50 கோடி வெள்ளியை அரசாங்கம் அங்கீகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜோகூர் மாநிலத்திற்கு ஒரு நாள் அலுவல் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், முன்னதாக மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர்- ஐ மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.








